FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Wednesday 10 December 2014

GDS SEMINAR ON 14/12/2014......



அன்பார்ந்த  GDS தோழர்களே , தோழியர்களே  வணக்கம் !

                           கடந்த 30.11.2014 அன்று நமது அஞ்சல்  துறையின் postman பணிக்கான  தேர்விற்கு seminar  நடை பெற்றது  என்பது அனைவரும் அறிந்ததே .அதில் பெரும்பாலான GDS தோழர்கள் கலந்து கொண்டு  பயனடைந்தனர் . அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது சங்கத்தின் சார்பாக  அடுத்த  seminar-ஆனது  14.12.2014  அன்று  நமது  தர்மபுரி  தலைமை  அஞ்சலகத்தில் நடைபெற  உள்ளது

நமது துறையின் ஓய்வு பெற்ற முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், திரு.R.K.கண்ணன் அவர்களும் திரு.பாலாஜி உதவி  அஞ்சல் கண்காணிப்பாளர் தர்மபுரி ,அவர்களும் சிறப்பு வகுப்புகள் எடுக்க தங்கள் இசைவை தெரிவித்துள்ளனர் . முதற்கட்டமாக   வருகின்ற  14.12.2014 அன்று   திரு. பாலாஜி உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் அவர்கள்  கணிதமும் மதிய இடைவேளைக்கு பிறகு நமது தோழர்கள் ஆங்கிலம், தமிழ் மற்றும்  பொது அறிவு வகுப்புகளும் எடுக்க உள்ளனர்.

14.12.2014 நடைபெறும்  seminar-ஆனது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.  எனவே அனைத்து GDS  தோழர்களும்  GDS to PA, GDS TO PM, GDS TO MTS  ஆகியவற்றிற்கு  தங்களை தயார்படுத்திகொண்டு  இருப்பவர்களும்  இச்சிறப்பு  வகுப்புகளில்  கலந்து கொண்டு  பயனடையுமாறு  கேட்டுகொள்கிறோம்.


தெய்வத்தான்  ஆகாது  எனினும்  முயற்சிதன்
மெய்வருத்தக்  கூலி  தரும் !”





A.முஹமது  இஸ்மாயில்            C.சந்திரன்                                     V. பழனிமுத்து
P4-செயலாளர்              GDS-செயலாளர்          P3-செயலாளர்

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: